அலைபேசியில் ஏனடி அலைவரிசை மாற்றம்
திசைமாறி வீசுது என் காதல் காற்றும்
எத்தனை அழைத்தும் பதிலில்லை
தூதுகள் அனுப்பியும் பயனில்லை
என்னடி ஆச்சு என் கல்நெஞ்சக்காரி
என்னதான் ஆச்சு நீ கோவிக்கும் மாரி
என் கொஞ்சல்கள் உனக்கு நினைவில்லையா
என் கெஞ்சல்கள் காதில் விழவில்லையா
துடிக்கும் இதயத்தை நிறுத்தி விடாதே
அது உனக்காய் துடிக்குது மறந்து விடாதே!
நீ மறந்தால் என் இதயம்
துடிக்க மறக்கும் இதையும்
மறந்துவிடாதே!
– குரு. விஷ்ணுகிரி



Leave a Reply